ADDED : நவ 22, 2024 05:34 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில், 63ம் ஆண்டு மருந்தியல் வார விழா நேற்று துவங்கியது.
மருந்தியல் துறை சார்பில், நடந்த விழாவிற்கு, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்தியல் துறையின் டீன் தனலட்சுமி வரவேற்றார். பொறியியல் கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதி சிறப்புரை வழங்கினார்.
புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறையின் உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் 'ஆரோக்கியத்தை சிந்தியுங்கள்' என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். கல்லுாரி வளாக தோட்டத்தில் மூலிகைச் செடிகள் நடப்பட்டது. மருந்தியல் துறை சார்ந்த மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.