2ம் கட்ட ‘மாப் அப்’ சுற்று தகுதி பட்டியல் வெளியீடு
2ம் கட்ட ‘மாப் அப்’ சுற்று தகுதி பட்டியல் வெளியீடு
UPDATED : அக் 29, 2026 12:36 AM
ADDED : அக் 29, 2026 12:36 AM
புதுச்சேரி: சென்டாக் மாணவர் சேர்க்கை 2ம் கட்ட மாப்- அப் சுற்றுக்கான தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்டாக் நிர்வாகம் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி சென்டாக் நடப்பாண்டுக்கான (2026–27) இளங்கலை தொழிற்கல்வி, கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கான 2ம் கட்ட மாப் -அப் சுற்று விருப்ப பட்டியல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது.
பட்டியலை மாணவர்கள் www.centacpuducherry.in ல் பார்வையிடலாம்.
இதில், குறைகள் இருப்பின், மாணவர்கள் டாஷ்போர்டு லாகின் மூலம் விருப்பத்தைப் பயன்படுத்தி இன்று காலை 10:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இரண்டாம் கட்ட மாப்-அப் சுற்று வழிகாட்டுதல்களை சென்டாக் வெளியிட்டுள்ளது. மாப்-அப் 2 சுற்றுக்கு விருப்பம் தெரிவித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டிற்குப் பரிசீலிக்கப்படும்.
கூடுதல் விபரங்களுக்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளம், லாகின் டாஷ்பிரேக் உள்ள குறைதீர்க்கும் பகுதி அல்லது 0413-2655570, 2655571 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
