செவிலியரிடம் தாலி செயின் பறித்த உடற்கல்வி ஆசிரியர் கைது
செவிலியரிடம் தாலி செயின் பறித்த உடற்கல்வி ஆசிரியர் கைது
UPDATED : நவ 16, 2026 11:06 PM
ADDED : நவ 16, 2026 11:06 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே செவிலியரிடம் தாலி செயின் பறித்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் மனைவி சாந்தி, 59; செங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2ம் தேதி பணி முடிந்து, மாலை 5:30 மணியளவில் உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, வழியில் பைக்குடன் நின்றிருந்த ஆசாமி, செவிலியர் சாந்தி கழுத்தில் இருந்த 18 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.
புகாரின்பேரில் உளுந்துார்பேட்டை குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த சித்தேஸ்வரன் மகன் அருண்குமார், 36, சாந்தியிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. அதையடுத்து, சென்னையில் இருந்த அருண்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 15 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அருண்குமார் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் என்பதும், சம்பவத்தன்று சென்னையிலிருந்து சேலம் செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே நடந்து சென்ற சாந்தியிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார்.
