/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தவளக்குப்பம்-மடுகரை சாலையில் மறியல்
/
தவளக்குப்பம்-மடுகரை சாலையில் மறியல்
ADDED : அக் 03, 2024 04:52 AM

நெட்டப்பாக்கம், : தவளக்குப்பம்-மடுகரை சாலையில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
ஏம்பலம் தொகுதி கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்., சார்பில், கிராம சபை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில், அதிகாரிகள் பங்குபெறாமல், டேங் ஆப்ரேட்டர்கள் மட்டும் பங்கேற்றனர்.
இதனை கண்டித்தும் கரிக்கலாம்பாக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நேற்று காலை 11.00 மணியளவில், திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். போலீசாரின் சமாதான பேச்சை ஏற்காமல் மறியலை தொடர்ந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற முன்னாள் அமைச்சர் கந்தசாமி மறியலில் ஈடுப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவரும் பங்கேற்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின் அவரிடம் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்., ஆணையர் மொபைல் போன் மூலம் பேசினார். ஆணையர் உறுதிமொழியை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால் தவளக்குப்பம்-மடுகரை, பாகூர்-வில்லியனுார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.