ADDED : செப் 20, 2026 06:02 PM
புதுச்சேரி: ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் செம்பியப்பாளையம் கிராமத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி சமுதாய நலப்பணித் திட்டம் மற்றும் புதுச்சேரி ரோட்டரி பீச் டவுன் சங்கம் சார்பில், ஏம்பலம், புதுக்குப்பம் மற்றும் சுற்றுவட்டப் பகுதியில் பனை விதைகள் நடப்பட்டு வந்தன.
அந்த வகையில் சிவராந்தகம்-அரியூர் எரிக்கரை, நல்லாத்துர், மேலக்குப்பம், தென்னம்பாக்கம், செம்பியப்பாளையம், கோர்காடு ஆகிய பகுதிகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி பீச் டவுன் துணை ஆளுநர் புருஷோத்தமன், பள்ளி துணை முதல்வர் வில்சன் ஆகியோர் தலைமை தாங்கினர். ரோட்டாரி பீச் டவுன் தலைவர் தேவராஜ் மகாதேவன், செயலாளர் பிரகாஷ் , பொருளாளர் ராம்குமார், புதுச்சேரி போக்குவரத்து கழக காப்பாளர் சண்முகம், சமூக ஆர்வலர் அபினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பனை விதைகள் நடும் பணியில் ஈடுப்பட்டனர். ஏற்பாடுகளை சமுதாய நலப்பணித் திட்ட ஆசிரியர் ஜானகிராமன் செய்திருந்தார்.
