ADDED : செப் 20, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது இடத்தில் ரகளையில் ஈடுப்பட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். கடலுார் அடுத்த திருமாணிக்குழி பகுதியைச் சேர்ந்த சாந்தமூர்த்தி, 22, என்பவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலை எதிரே நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் மங்கலத்தில் ரகளையில் ஈடுப்பட்ட உறுவையாறு சக்திவேல், 38, வில்லியனுாரில் ரகளையில் ஈடுப்பட்ட வில்லியனுார் மதன்கிருஷ்ணன், 22; தினேஷ், 26; பார்த்தசாரதி, 28; சீனுவாசன், 27; முகிலன், 22, ஆகியோரை வில்லியனுார் போலீசார் கைது செய்தனர்.
