தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வி.ஏ.ஓ., அலுவலகம் எம்.எல்.ஏ., திறப்பு

வி.ஏ.ஓ., அலுவலகம் எம்.எல்.ஏ., திறப்பு

வி.ஏ.ஓ., அலுவலகம் எம்.எல்.ஏ., திறப்பு


ADDED : செப் 20, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், திருவாண்டார்கோவில் கிராமத்தில் ரூ. 32.60 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வி.ஏ.ஓ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

வில்லியனுார் தாசில்தார் சந்தோஷ்குமார், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, வி.ஏ.ஓ., அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் வெங்கடேஸ்வரன், இளநிலைப் பொறியாளர் ஜோதி, பணி மேற்பார்வையாளர் சுனிதா, பணி ஆய்வாளர் சரசு, கிளை நுாலகர் தியாகராஜன், உதவியாளர்கள் கவிதா, வீராசாமி, ஒப்பந்ததாரர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர். வி.ஏ.ஓ., குருபிரசாத் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us