மனைகள் சி.எல்.ஆர்., விலையை குறைக்க வணிக உரிமையாளர்கள் சங்கம் மனு
மனைகள் சி.எல்.ஆர்., விலையை குறைக்க வணிக உரிமையாளர்கள் சங்கம் மனு
ADDED : செப் 06, 2026 06:00 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில நில வணிக உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் வில்லியனுார் துணை கலெக்டர் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு விலை நிர்ணய மதிப்பீட்டினை புதிதாக மனைப்பிரிவு செய்யப்படும் விற்பனை மனைகளுக்கு மட்டும் குறைந்த அளவில் விலை நிர்ணயம் செய்யலாம். ஆனால் அதனை ஒட்டியுள்ள விலை நிலங்களின் அரசு மதிப்பினை உயர்த்த வேண்டாம்.
இதனால் விவசாய நிலங்கள் விற்பனை மதிப்பு உண்டாகும். ஏற்கனவே சி.எல்.ஆர்., மதிப்பினை மார்கெட் விலையினை விட கூடுதலாக உயர்த்தி உள்ளீர்கள். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சி.எல்.ஆர்., விலையினை கண்டு பயந்து மனைகளை வாங்க முடியவில்லை.
எனவே அந்தந்த பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து சி.எல்.ஆர்., மதிப்பீட்டினை நிர்ணயம் செய்ய வேண்டும். சி.எல்.ஆர்., மதிப்பினை ஏற்கனவே அதிகமாக ஏற்பட்டுள்ள மதிப்பினை முடிந்தவரை குறைக்க வேண்டும்.
புதிய மனைப்பிரிவிற்கு குறைந்த அளவு சி.எல்.ஆர்., மதிப்பீடு செய்தும், அதனை ஒட்டியுள்ள நிலங்களுக்கு பழைய அரசு மதிப்பிடு தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
