ADDED : செப் 25, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை நெட்டப்பாக்கம் கொம்யூன பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் கொடியசதை்து துவக்கி வைத்தார். பள்ளி துணை முதல்வர் சதாசிவம் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் எழில்வேந்தன் வழிநடத்தினார்.
ஊர்வலத்தில் பங்கேற்ற என்.எஸ்.எஸ்., மாணவர்கள் நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
