தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சப்ளிமெண்ட் 1ம் பக்கம் புதுச்சேரியில் 3 நாள் ‘சேது சேவா முகாம்கள்’ 

சப்ளிமெண்ட் 1ம் பக்கம் புதுச்சேரியில் 3 நாள் ‘சேது சேவா முகாம்கள்’ 

சப்ளிமெண்ட் 1ம் பக்கம் புதுச்சேரியில் 3 நாள் ‘சேது சேவா முகாம்கள்’ 


ADDED : செப் 25, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சேது சேவா முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சரின் தனிச் செயலர் செய்திக்குறிப்பு;

மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ‘சேது சேவா முகாம்கள்’ நடத்தப்பட உள்ளன.  அரசின் நலத்திட்டங்கள், சமூகத்தின் கடைசி நிலையில் உள்ள தகுதியான பயனாளியையும் சென்றடைய வேண்டும் என்பதே இம்முகாம்களின் முக்கிய நோக்கம்.

குடிமைப் பொருள் வழங்கல் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதுடன், குடும்ப உறுப்பினர்களுக்கான இ.கே.ஓய்.சி., சரிபார்ப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இ.கே.ஓய்.சி., நிறைவு செய்யாத  பயனாளிகள், தங்கள் தொகுதியில் முகாம் நடைபெறும் இடத்திற்குச் சென்று, இ.கே.ஓய்.சி., சரிபார்ப்பை எளிதாக மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமில், ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான இ.கே.ஓய்.சி., செய்தல், ரேஷன் அட்டையில் ஆதார் எண்ணுடன் இணைந்த மொபைல் எண்ணை இணைத்தல்,  முதியோர் மற்றும் நேரில் ரேஷன் கடைக்கு வர இயலாத பயனாளிகள், தங்களுக்குப் பதிலாக குடும்ப உறுப்பினர் அல்லது தகுதியான நபர் மூலம் இலவச அரிசி மற்றும் இதர பொருட்களைப் பெற்றுக்கொள்ள நியமன வசதி செய்வதற்கான விண்ணப்ப வசதி உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மற்றும் வழி காட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.

அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், இ.கே.ஓய்.சி., நிலுவையில் உள்ள பயனாளிகளை முகாம்களுக்கு அழைத்து வந்து, இவ்வசதிகளைப் பயன்படுத்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இம்முகாம்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்பதுத்திக் கொள்ள  வேண்டும்.

அதன்படி, வரும் 28ம் தேதி பாகூர், மணவெளி, மங்கலம்,  லாஸ்பேட்டை,  முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, இந்திரா நகர் தொகுதிகளிலும், 29ம் தேதி, ஏம்பலம், அரியாங்குப்பம், வில்லியனுார், காமராஜ் நகர்,  ராஜ்பவன், கதிர்காமம்,  மண்ணாடிப்பட்டு, காலாப்பட்டு ஆகிய தொகுதிகளிலும்,  30ம் தேதி, நெட்டப்பாக்கம், உப்பளம், ஊசுடு,  முதலியார்பேட்டை,  உழவர்கரை, திருபுவனை, நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளிலும் முகாம் நடக்கிறது. 

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us