sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பிளாஸ்டிக் கழிவுகள் ஒப்படைப்பு

/

 மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பிளாஸ்டிக் கழிவுகள் ஒப்படைப்பு

 மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பிளாஸ்டிக் கழிவுகள் ஒப்படைப்பு

 மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பிளாஸ்டிக் கழிவுகள் ஒப்படைப்பு


ADDED : பிப் 28, 2026 05:06 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்கம் வட்டம் 2 சார்பில் பிளாஸ்டிக் இல்லா வட்டம்-2 எனும் சிறப்பு நிகழ்ச்சி இந்திரா நகர் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் நடந்தது.

கடந்த ஏழு மாதங்களாக வட்டம்-2ல், 32 அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 3,500 பேர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை தனித்தனியாக அவரவர் இருப்பிடத்தில் பாட்டில்களில் சேமித்து வந்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வு வளர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் நிறைவு நிகழ்வாக சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் நேற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார். எக்கோல் ஆங்கிலேஸ் அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். பெண்கல்வி துணை இயக்குநர் ராமச்சந்திரன் நோக்க உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் திட்ட இயக்குநர் எழில் கல்பனா, துவக்க கல்வி துணை இயக்குநர் கவுரி பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பள்ளி துணை ஆய்வாளர்கள், வட்டம் 2ல் பணிபுரியும் 32 பள்ளிகளிலிருந்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பிளாஸ்டிக் கழிவு அகற்றிய 32 பள்ளிகளுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை இந்திரா நகர் தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். பள்ளி துணை ஆய்வாளர் வட்டம்- 2 செல்வி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us