/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி
/
பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி
ADDED : ஏப் 30, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை, ரோட்டரி கிளப் புதுச்சேரி சிட்டி சார்பில் காந்தி சிலை பின்புறம் மற்றும் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி நடந்தது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி தலைமை தாங்கினார்.
ரோட்டரி கிளப் புதுச்சேரி சிட்டி தலைவர் அறிவழகன், ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், ஆயுள்கால உறுப்பினர்கள் திலக வதி, பிரதிஷ், இருதய ராஜ், மகாலிங்கம், விஜயநாராயணன், ஆளவந்தார் ஆகியோர் இதயா கல்லுாரி மாணவிகளுடன் இணைந்து கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

