தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கால்பந்து போட்டிக்கான வீரர்கள் நாளை தேர்வு

கால்பந்து போட்டிக்கான வீரர்கள் நாளை தேர்வு

கால்பந்து போட்டிக்கான வீரர்கள் நாளை தேர்வு


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 05:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 05:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோவாவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் பங்கேற்க வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி, நாளை (30ம் தேதி) நடக்கிறது.

புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குநரக இயக்குநர் செய்திக்குறிப்பு;

அகில இந்திய குடிமை பணிகள் கால்பந்து போட்டி (ஆண்கள் பிரிவு) 2026–27ம் ஆண்டிற்கான போட்டி, கோவாவில், அடுத்த மாதம் 17 முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில், புதுச்சேரி அணியின் சார்பில், பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை (30ம் தேதி) நடக்கிறது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் அரசு ஊழியர்கள் தங்களது அரசு அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும். மேலும், பங்கேற்பதற்கான நுழைவு படிவத்தில் சம்பந்தப்பட்ட துறை தலைவர் அல்லது துறை சார்ந்த அதிகாரியின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.

இதுகுறித்து, கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ள புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குநரகத்தை அணுகலாம்.

மேலும், dsya.pdy.gov.in இணைய தளத்தில் போட்டி தொடர்பான அறிவிப்புகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us