/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வீரர்கள் தேர்வு
/
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வீரர்கள் தேர்வு
ADDED : செப் 20, 2025 06:52 AM

புதுச்சேரி : தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி குராஷ் தற்காப்பு கலை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான 69வது குராஷ் தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டிகள் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் புதுச்சேரி அரசு சார்பில், பங்கேற்கும் வீரர், வீராங்கணைகள் தேர்வு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், லாஸ்பேட்டை பல்நோக்கு அரங்கில் நேற்று நடந்தது.
பல்வேறு அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். கல்வித்துறையின் விளையாட்டு பிரிவு பொறுப்பாளர் ரவிக்குமார், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு புதுச்சேரி பொறுப்பாளர் பிரகாஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜாமணி பாரதிதாசன், ஆனந்தராஜ், ஆசிரியை சிவமதி ஆகியோர் வீரர், வீராங்கணைகளை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் அரசு சார்பாக பங்கேற்க உள்ளனர்.
ஏற்பாடுகளை கே.ஏ.பி., குராஷ் சங்க பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.