/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பண்டசோழநல்லுார் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைப்பு
/
பண்டசோழநல்லுார் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைப்பு
பண்டசோழநல்லுார் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைப்பு
பண்டசோழநல்லுார் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைப்பு
ADDED : மே 28, 2025 11:44 PM

நெட்டப்பாக்கம்: தினமலர் செய்தி எதிரொலியால், பண்டசோழநல்லுார் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில எல்லையில் அமைந்துள்ளது பண்டசோழநல்லுார் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து போலீஸ், ஊர்காவல் படை தேர்வில் போட்டியிட்டு 5க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிக அளவில் இளைஞர்கள், பெண்கள் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் சாலைகளில் நடைபயிற்சி மேற்கொண்டனர். இப்பகுதியில் கிரிக்கெட், வாலிபால், புட்பால் விளையாடும் வீரர்கள் மைதானம் இல்லாததால் ஆபத்தான முறையில் காலி மனைகளில் விளையாடி வந்தனர். இதனை சுட்டிக்காட்டி தினமலர் விளையாட்டு பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து ஆதி திராவிடர் நலத்துறை மூலம் பண்டசோழநல்லுார் மனமகிழ் மன்றம் அருகில் ஒரு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள காலி மனைகளை பயன்படுத்தி வந்தனர். எங்கள் பகுதிக்கு விளையாட்டு திடல் அரசு மூலம் அமைத்து தர வேண்டும் என்ற எங்களது கோரிக்கை தினமலர் நாளிதழில் செய்தியாக வெளிவந்தது.
இதன் காரணமாக எங்கள் பகுதிக்கு விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலீஸ் தேர்வுக்கு தாயராகும் இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.