/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி
/
மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி
ADDED : டிச 22, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நெல்லித்தோப்பு, பெரியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி மகன் சஞ்சய், 21; பிளம்பர். இவரும் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ், 23. இருவரும், நெல்லித்தோப்பு செங்கேணியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் பிளம்பிங் வேலை செய்ய, நேற்று முன்தினம் சென்றனர்.
மதியம் விக்னேஷ் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று திரும்பிய போது, சஞ்சய் மின்சாரம் தாக்கிய நிலையில் தண்ணீர் தொட்டி அருகில் கிடந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, சஞ்சய் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

