ADDED : டிச 21, 2025 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்ச் சி ட்டி ரோட்டரி சங்கம், உதவிக்கரங்கள் சமூக நல தொடர் கல்வி இயக்கம் ஆகியன சார்பில், போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ஊர்வலம் நோணாங்குப்பத்தில் நடந்தது.
விழிப்புணர்வு ஊர்வலத்தை, ரோட்டரி துணை கவர்னர் டாக்டர் அருண் தீப்பாய்ந்தான் துவக்கி வைத்தார்.
பிரெஞ்ச் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் பரிமளம் தலைமை தாங்கினார்.
செயலாளர் கண்ணன், பொருளாளர் உதயசங்கர், முன்னாள் தலைவர் தேவராஜ், உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், பாபு உள்ளிட்ட பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதில், போலியோ சொட்டு மருந்து முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

