/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளம்பர் சாவு : போலீசார் விசாரணை
/
பிளம்பர் சாவு : போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 19, 2025 02:32 AM
புதுச்சேரி: பெட்டில் இருந்து கீழே விழுந்த பிளம்பர் உயிரிழந்தார்.
வேல்ராம்பட்டு குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி, 35; பிளம்பர். சவுதி நாட்டில் வேலை செய்யும் போது, இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு ஊருக்கு வந்து விட்டார். வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றார்.
வீட்டில் பெட்டில் படுத்திருந்த போது நேற்று முன்தினம் தவறி கீழே விழுந்தார். அவரது உடல் நிலை மோசமானது. அவரது தாய் அருகில் இருந்தவர்கள் உதவியுடன், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.