/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 1 சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்
/
பிளஸ் 1 சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்
ADDED : மே 20, 2025 06:29 AM
புதுச்சேரி: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 2025-26ம் ஆண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் நேற்று(19ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 23ம் தேதிக்குள் அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாணவ- மாணவிகள் ஒன்றிற்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.