தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரதமர்  மோடி பிறந்த நாள்: வீதி நாடக நிகழ்ச்சி துவக்கம்

பிரதமர்  மோடி பிறந்த நாள்: வீதி நாடக நிகழ்ச்சி துவக்கம்

பிரதமர்  மோடி பிறந்த நாள்: வீதி நாடக நிகழ்ச்சி துவக்கம்


UPDATED : செப் 27, 2026 06:02 PM

ADDED : செப் 27, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 06:02 PM ADDED : செப் 27, 2026 06:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ., சார்பில், பிதரமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை மையமாக கொண்ட வீதிநாடக நிகழ்ச்சியை தேசிய அமைப்பு பொதுசெயலாளர் சந்தோஷ் துவக்கி வைத்தார்.

புதுச்சேரி பா.ஜ., சார்பில், பிரதமர் மோடியில் பிறந்த நாளையொட்டி கடந்த 17ம் தேதி முதல் அக்., 17 வரை சேவை மாதமாக கொண்டாடி வருகின்றனர். முதல் நிகழ்ச்சியாக கடந்த 17ம் தேதி ஆசிர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அங்கன்வாடி திருவிழா என 13 நிகழ்வுகளுக்கு திட்டமிட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாகவும், பிரதமரின் 25 ஆண்டுகளாக பொது வாழ்க்கையை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், வீதி நாடக நிகழ்ச்சி தொகுதிதோறும் நான்கு இடங்களில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் துவக்க விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று நடந்தது. பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் துவக்கி வைத்தார். மாநில தலைவர் ராமலிங்கம், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், செல்வகணபதி எம்.பி., மீனாட்சிசுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், அசோக்பாபு, பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், மீனவரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகு பேரணியை பார்வையிட்டார். இதில் 76 படகுகள் 'மோடி 25' என்ற வடிவில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, மோடியின் சாதனைகளை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சியை பார்வையிட்டார். ஜிப்மரில் நடந்த ரத்த தான முகாமை சந்தோஷ் துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us