UPDATED : செப் 27, 2026 06:08 PM
ADDED : செப் 27, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: யூத் யுனைடெட் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் இளம் விஞ்ஞானி போட்டியில் முன்னாள் சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார்.
யூத் யுனைடெட் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், ஆயுஷ் துறை இணைந்து இளைஞர் ஒற்றுமை திருவிழா நடந்தது.
இதன் ஒரு நிகழ்ச்சியாக இந்தியாவின் இளம் விஞ்ஞானி போட்டி நடந்தது. புதுச்சேரி வேலம்மாள் போதி வளாகத்தில் நடந்த போட்டியில் முன்னாள் சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், படைப்பாற்றலையும் பாராட்டினார்.
