ADDED : செப் 27, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: குடும்ப பிரச்னையில் வெளியில் சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசார் புகார் செய்தார்.
புதுச்சேரி கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி பிரபாவதி,25. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 24ம் தேதி, இவர்களுக்கிடை ஏற்பட்ட பிரச்னையில் கணவரிடம் கோபித்து கொண்டு, பிரபாவதி வெளியில் சென்றார்.
மாலை வரை வீட்டுக்கு வராததால் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது கணவர் சேவியர் கொடுத்த புகாரின் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
