/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ம.க., கிழக்கு மண்டல அலுவலகம் திறப்பு
/
பா.ம.க., கிழக்கு மண்டல அலுவலகம் திறப்பு
ADDED : பிப் 18, 2026 04:36 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் பா.ம.க., கிழக்கு மண்டல தலைமை அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
விழாவிற்கு கிழக்கு மண்டல மாநில அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, அலுவலகத்ததை திறந்து வைத்து உறுப்பினர் படிவங்களை வழங்கினார். மேற்கு மண்டல அமைப்பாளர் மதியழகன், வடக்கு மண்டல வடிவேல், மாநிலத் துணைத் தலைவர் சத்யா முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாநில இளைஞரணி தலைவர் சேகர், கிழக்கு மண்டல துணை அமைப்பாளர்கள் பாண்டியராஜன், முருகன், சரவணன், ராஜாராம், ஜாகிராமன், ரவி, மகளிர் அணி தலைவி சஜிதா, செயலாளர் தேன்மொழி, துணைத் தலைவர் தேவி, துணைச் செயலாளர் சரசு பொருளாளர் சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின் நடந்த கூட்டத்தில் தொகுதி வாரியாக கூட்டம் போடுவது, கூட்டணியில் 2 தொகுதியை பெற தலைமையை வற்புறுத்துவது. கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற செய்வது, தலைவர் அன்புமணியை அழைத்து பொதுக்குழு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

