தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பா.ம.க., ஆலோசனை கூட்டம்

பா.ம.க., ஆலோசனை கூட்டம்

பா.ம.க., ஆலோசனை கூட்டம்


UPDATED : அக் 18, 2026 04:39 PM

ADDED : அக் 18, 2026 04:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 04:39 PM ADDED : அக் 18, 2026 04:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி மாநில பா.ம.க., சார்பில் வில்லியனுார் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

மாநில அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாநில வன்னியர் சங்க தலைவர் வடிவேல், மாநில ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், மாநில நிர்வாக குழு தலைவர் கணபதி, தொழிற்சங்க தலைவர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பா.ம.க., தமிழக இளைஞர் அணி செயலாளர் குணாநிதி பங்கேற்று, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர்கள் நந்தாதாஸ், நகப்பன், சங்கர், முருகன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்படபலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பா.ம.க., தொகுதி வாரியாக கட்சியை வளுப்படுத்துவது, கட்சி தலைவர் அன்புமணி பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்வது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்சியினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us