தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுமாப்பிளை கொலை வழக்கில் 6 பேர் கைது: முன்விரோதத்தில் கொன்றது அம்பலம்

புதுமாப்பிளை கொலை வழக்கில் 6 பேர் கைது: முன்விரோதத்தில் கொன்றது அம்பலம்

புதுமாப்பிளை கொலை வழக்கில் 6 பேர் கைது: முன்விரோதத்தில் கொன்றது அம்பலம்


UPDATED : அக் 18, 2026 04:51 PM

ADDED : அக் 18, 2026 04:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 04:51 PM ADDED : அக் 18, 2026 04:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: புதுமாப்பிளை வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகில் உள்ள கரிக்கன் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பிரவின்குமார், 27; டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். பைக்கில் வந்த இவரை கடந்த 16ம் தேதி அபிேஷகப்பாக்கத்தில் காரில் வந்த கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கை, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காரில் தப்பி சென்ற குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தப்பி சென்ற குற்றவாளிகளின் மொபைல் போன் டவரின் சிக்னல் வில்லியனுார் அடுத்த கீழூர் பகுதியில் இருப்பதாக காட்டியது. அதையெடுத்து, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு 6 பேரை பிடித்தனர்.

அதில், நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த ஏகாம்பரம்,31; அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் வீதியை சேர்ந்த கிேஷார், 22; அதே பகுதியில் உள்ள தக்ககுட்டையை சேர்ந்த புகழ், 23; ரெட்டியார்பாளையம், பூமியான்பேட்டை விஜி,31; தர்மாபுரி வெங்கடேசன்,22; கணுவாப்பேட்டை, கப்பக்கடை தெரு சிவக்குமார்,22, ஆகியோரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

வாணரப்பேட்டையை சேர்ந்த ரவுடியான பாம் ரவி கொலை வழக்கில், பிரவின்குமார் சேர்க்கப்பட்டு அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டதும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

குற்றவாளிகள் பயன்படுத்திய மாருதி ஷிப்ட் கார் மற்றும் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான, பாம் ரவியின் கூட்டாளியான வாணரப்பேட்டை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 3 பேரை பிடிக்க, போலீசார் தமிழகம் விரைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us