தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி போலீசார் புதுக்கோட்டை விரைவு

ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி போலீசார் புதுக்கோட்டை விரைவு

ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி போலீசார் புதுக்கோட்டை விரைவு


UPDATED : அக் 18, 2026 04:51 PM

ADDED : அக் 18, 2026 04:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 04:51 PM ADDED : அக் 18, 2026 04:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரவுடியை வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில், தனிப்படை போலீசார் புதுக்கோட்டை விரைந்துள்ளனர்.

புதுச்சேரி, திருவள்ளுவர் நகர், செட்டிகுளம் தெருவை சேர்ந்தவர் விஷ்வா ஆதித்யா, 23. ரவுடியான இவர், கடந்த 12ம் தேதி இரவு 9:30 மணிக்கு தந்தை வீரவளவனை புதிய பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டு, மறைமலையடிகள் சாலையில், நின்றிருந்தார்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 பேர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்வா ஆதித்யாவை வெட்டிவிட்டு தப்பியோடினர். காயமடைந்த விஷ்வா ஆதித்யாவை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் விஷ்வா ஆதித்யாவை வெட்டியது, கோட்டக்குப்பம் ஸ்ரீதர், நைனார் மண்டபம் மாதேஷ் ஆகியோர் என தெரியவந்தது.

இருவரும் மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாக உள்ளனர். இவர்களை பிடிக்க விழுப்புரம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு தனிப்படை சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை.

இந்நிலையில் இருவரும் புதுக்கோட்டையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்றுள்ளனர். மற்றொரு பிரிவினர் கொலை முயற்சியில் ஈடுபட்ட ஸ்ரீதர், மாதேஷ் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளிடம் தீவிர விசாரைணயில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us