UPDATED : அக் 18, 2026 04:51 PM
ADDED : அக் 18, 2026 04:49 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: கரிக்கலாம்பாக்கம் அடுத்த கோர்க்காடு கிராமத்தில் டி.வி.எஸ்., சுந்தரம் பாட்னர்ஸ் லிமிடெட் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் வெல்டிங் பிரிவில் ஒப்பந்த ஊழியராக கோர்க்காடு சுப்ரமணி மகன் ராசுக்குட்டி, 26, வேலை செய்து வருகிறார்.
கம்பெனி நிர்வாகம் சார்பில், சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கம்பெனியில் இருந்து ராசுக்குட்டி கடந்த 11ம் தேதி மாலை 3:00 மணியளவில் காப்பர் கம்பி திருடிச் சென்றது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து, கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் சீனியர் எக்ஸிகியூட்டி சுகுமார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, ராசுக்குட்டியை கைது செய்தனர்.
