/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு போக்சோ விழிப்புணர்வு கூட்டம்
/
செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு போக்சோ விழிப்புணர்வு கூட்டம்
செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு போக்சோ விழிப்புணர்வு கூட்டம்
செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு போக்சோ விழிப்புணர்வு கூட்டம்
ADDED : பிப் 16, 2024 07:14 AM

திருக்கனுார் : போக்சோ சட்டம் குறித்து செங்கல் சூளை தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள்- போலீசார் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரியா வரவேற்றார். இதில், செல்லிப்பட்டு, சோரப்பட்டு, விநாயகம்பட்டு, செட்டிப்பட்டு, வம்புப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் பேசுகையில், செங்கல் சூளை வேலைக்கு ஆட்களை அமர்த்தும் போது, அவர்களின் முகவரி ஆவணங்களை சரிபார்ப்பதுடன். நல்லவர்களா என விசாரிக்க வேண்டும். சூளையில் வேலை செய்பவர்களின் குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால் அவர்களை வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது.
அங்கு, பெண் குழந்தைகள் இருப்பின் அவர்களின் நடவடிக்கைகளை உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், போக்சோ சட்டம் குறித்து வேலை செய்யும் குடும்பத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சூளையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உறவினர்கள் என்று யாரேனும் புதிதாக வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.