ADDED : பிப் 15, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் பி.எம்.ஸ்ரீ., ஜவகர் நவோதய வித்யாலயா பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மகளிர் சப் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளையும் சட்டரீதியாக அவைகளை எதிர்கொள்ளும் முறைகளையும் விளக்கிக் கூறினர். பின் மாணவ, மாணவிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் வித்யாலயா ஆங்கில ஆசிரியர் பெரிய கேத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

