/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய போக்சோ கமிட்டி
/
பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய போக்சோ கமிட்டி
பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய போக்சோ கமிட்டி
பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய போக்சோ கமிட்டி
ADDED : நவ 21, 2024 05:33 AM
கல்வித்துறை சுற்றறிக்கை
புதுச்சேரி: பள்ளிகளில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய போக்சோ சட்டத்திற்கு இணங்க, பள்ளி அளவில் பல்வேறு போக்சோ கமிட்டிகள் உருவாக்க சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை; அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி அளவிலான போக்சோ கமிட்டி தவறாமல் உருவாக்கப்பட வேண்டும்.
கமிட்டியின் தலைவராக பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர் செயல்பட வேண்டும். கமிட்டி உறுப்பினர்களாக ஒரு மூத்த பெண் ஆசிரியர், ஒழுங்கு நடவடிக்கைகள் எதற்கும் ஆட்படாத ஆண் ஆசிரியர் ஒருவரும், பெற்றோர் ஒருவரும், குழந்தைகள் நலன் தொடர்பான நலப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒரு அரசு, அரசு சாரா சமூக நல அமைப்பின் உறுப்பினர் ஒருவரும், அதே பள்ளியில் பயிலும் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
பள்ளி அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் போக்சோ கமிட்டி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில அளவிலான போக்சோ கமிட்டியில், பள்ளி கல்வி இயக்குநர் தலைவராக செயல்படுவர். உறுப்பினர்களாக துணை இயக்குநர் (நிர்வாகம்), இணை இயக்குநர், மாநில திட்ட இயக்குநர், இணை இயக்குநர், சட்ட வல்லுநர் மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை உதவி இயக்குநர் உறுப்பினர்களாக செயல்படுவர்.
மாவட்ட அளவிலான போக்சோ கமிட்டியில் துணை இயக்குநர், முதன்மை கல்வி அலுவலர், பள்ளி கல்வி இயக்குநரின் பிரதிநிதி தலைவராக செயல்படுவர். பள்ளித்துணை ஆய்வாளர் அல்லது அதற்கு இணையான தகுதியில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் உறுப்பினர்கள், சட்ட வல்லுனர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அல்லது குழந்தைகள் நலம் தொடர்பான சமூக நல, அரசு சாரா அமைப்பு உறுப்பினர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர்.
இந்த கமிட்டிகள், மாணவ மாணவியரிடம், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம், குழந்தைகள் நலம், பாலியல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் நடக்காத வகையிலும், பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் நடந்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம், பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்று தரும் பணிகளை மேற்கொள்ளும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

