அமைதிக்காக அவர் நிறைய செய்கிறார்: டிரம்ப் குறித்து புடின் பாராட்டு
அமைதிக்காக அவர் நிறைய செய்கிறார்: டிரம்ப் குறித்து புடின் பாராட்டு
ADDED : அக் 10, 2025 10:31 PM

மாஸ்கோ: அமைதிக்காக அவர் நிறைய செய்கிறார் என டிரம்புக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு தெரிவித்துளார்.
ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடியதற்காக வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினோ மச்சாடோ 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது:
உலகில் சமாதானத்தை மேம்படுத்துவதற்கு பெரும் பங்களிப்பை டிரம்ப் செய்துள்ளார். டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிப்பது அவரது தனிச்சிறப்பு அல்ல. காசாவில் அமைதி உண்மையிலேயே ஒரு வரலாற்று சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேல் பிரதமர் பாராட்டு
இஸ்ரேல் பிரதமர் சமூக வலைதளத்தில் டொனால்டு டிரம்பைப் பாராட்டினார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: நோபல் குழு அமைதியைப் பற்றிப் பேசுகிறது. அதிபர் டொனால்டு டிரம்ப் அதைச் சாத்தியமாக்குகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.