ADDED : ஜூன் 27, 2026 11:43 PM

புதுச்சேரி: புதுவை தமிழ்ச்சங்கம் சார்பில், கவிஞர் கண்ணதாசன் நுாற்றாண்டு துவக்க விழா, தமிழ்சங்கத்தில் நடந்தது.
தமிழ்ச்சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்தாசு வரவேற்றார். சங்க துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணை செயலர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், 'காவியத்தாயின் இளையமகன்' என்ற தலைப்பில் கலக்கல் காங்கேயன், 'கவிஞர் நானோர் காலக்கணிதம்' என்ற தலைப்பில் கலைமாமணி கோவிந்தராசு ஆகியோர் கவியரங்கம் நடத்தினர்.
தொடர்ந்து கவிஞர்கள் பிரபா, குமரவேலு, யாழ்தமிழன், அருள்ராஜ், தேவி ஆகியோர் உரையாற்றினர். தமிழ்ச்சங்க தலைவர் முத்து, ஆளவந்தார் சித்தனுக்கு கண்ணதாசன் விருது வழங்கினார். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆட்சிக்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.
