ADDED : ஜூன் 27, 2026 11:44 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, புதுச்சேரி சப்தகிரி அறக்கட்டளை மற்றும் சாய்ராம் மது போதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் இணைந்து புதுச்சேரியில் விழிப்புணர்வு முகாமை நடத்தின.
சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். அதில், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், என்.ஆர்.காங்., மற்றும் சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
