'நீட்' தேர்வு குளறுபடிகளை கண்டித்து இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
'நீட்' தேர்வு குளறுபடிகளை கண்டித்து இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 27, 2026 11:45 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: நீட் தேர்வு குளறுபடியில் மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி புதுச்சேரி இளைஞர் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
'நீட்' உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் கண்டித்தும், இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், புதுச்சேரி மாநில இளைஞர் காங்., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், புது பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை நடந்தது.
மாநில இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமை தாங்கினார். திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, மத்திய பா.ஜ., அரசின் கல்விக்கொள்கை மற்றும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக கண்டனங்களை வெளிப்படுத்தி கோஷம் எழுப்பினர்.
