/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவிஞர் வாணிதாசனார் 111வது பிறந்த நாள் விழா
/
கவிஞர் வாணிதாசனார் 111வது பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 28, 2025 01:50 AM

புதுச்சேரி: கவிஞர்  வாணிதாசனார் கலை இலக்கிய பேரவை சார்பில்  வாணிதாசனார் 111-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
போராசியர்  வேல்முருகன் தலைமை தாங்கினார். கனியமுது வரவேற்றார். டாக்டர் திருவழுதி தொடக்க உரையாற்றினார். கால்நடை மருத்துவர் தமிழ்க்குமரன் நோக்கவுரையாற்றினார்.
விழாவை  பொன்முருகன் தொகுத்து வழங்கினார். 'கவிஞரேறு  வாணிதாசன் வண்ணத்தமிழ் வளம்' என்ற நுாலினை சபாநாயகர் செல்வம் வெளியிட, துணை வணிக வரி அலுவலர் ஜானகிராமன் பெற்றுக்கொண்டார்.
தமிழ் சங்கத்  தலைவர் முத்து, ஓய்வு பெற்ற எஸ்.பி., வீரபாலகிருஷ்ணன், ஆசிரியர் முருகேசன், அனைத்துலக பொங்குதமிழ் சங்கத்  தலைவர் சுந்தரபழணியப்பன், பேராசிரியர் கலைவேந்தன், கர்ணன், பொன்வாணி, பொன்மலர், பொற்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் தமிழறிஞர்களுக்கு கவிஞரேறு வாணிதாசனார் விருது  வழங்கப்பட்டது.
சிறந்த ஆசிரியர்களுக்கு ஆசியர் செம்மல் விருதும், சமூக சேவகர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
ஆசிரியர் அருள்நந்தினி, குறளமுது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வளர்மதி நன்றி கூறினார்.

