ADDED : ஏப் 01, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி இலக்கிய சோலை தமிழ் மன்றம் சார்பில் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
கவிஞர் குமரவேலு வரவேற்றார். கவிஞர் வடுகை கண்ணன் தலைமை தாங்கினார். கவிஞர் பத்மநாபன் 'திருக்குறள் தெளிவோம்' குறித்தும், பேராசிரியர் அவ்வை நிர்மலா 'பெண்களின் இன்றைய நிலை' குறித்தும் சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் படைப்பாளி பைரவி தலைமையில் 30க்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்று 'மங்கையரை போற்றுவோம்' தலைப்பில் கவிதைகள் வாசித்தனர்.
கவிஞர் காசிமுனியன் தொகுத்து வழங்கினார்.