மத்திய அமைச்சர் வருகையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணி
மத்திய அமைச்சர் வருகையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணி
ADDED : நவ 20, 2026 11:33 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மத்திய அமைச்சர் நட்டா வருகையொட்டி எஸ்.பி., வம்சீதரெட்டி தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஜிப்மர் அப்துல்கலாம் ஆடிட்டோரியத்தில் 15 வது பட்டமளிப்பு இன்று நடக்கிறது. விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நட்டா இன்று (நவ.,20) புதுச்சேரி வந்தார்.
அவரது வருகையொட்டி, இ.சி.ஆரில் எஸ்.பி., வம்சீதரெட்டி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் இன்று இரவு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
