/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்சி பொருளாக மாறிய 'போலீஸ் பூத்'
/
காட்சி பொருளாக மாறிய 'போலீஸ் பூத்'
ADDED : மார் 17, 2025 02:44 AM

புதுச்சேரி: அண்ணா சாலையில் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே போலீஸ் பூத் மூடப்பட்டதால், காட்சி பொருளாக மாறியுள்ளது.
புதுச்சேரி, ரெயின்போ நகர் பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, அண்ணா சாலையில், கணக்குகள் மற்றும் கருவூல இயக்குநரகம் (டி.ஏ.டி.,) அருகே காவல்துறை மூலம் போலீஸ் பூத் அமைக்கப்பட்டது. ஆனால், போலீஸ் பூத் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மூடியே கிடக்கிறது. இதனால், அருகில் உள்ள கடை வியாபாரிகள் போலீஸ் பூத்தை குடோன் போன்று பயன்படுத்தி, தற்போது குஜிலி கடையாக மாற்றி உள்ளனர்.
இதற்கிடையே, ரெயின்போ நகரில் சமீபத்தில் அங்கு 3 ரவுடிகள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குற்றச்சம்பவங்களை தடுக்க அமைக்கப்பட்ட போலீஸ் பூத், எப்போதும் மூடியே கிடக்கிறது. குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வெளியே வர அச்சமடைகின்றனர்.
மேலும், ரெயின்போ நகர் மக்கள் மூலம் போலீஸ் பூத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சோலார் சிஸ்டம் சேதமடைந்து வருகிறது' என்றனர்.