/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறையில் மொபைல் போன் கைதி மீது போலீசார் வழக்கு
/
சிறையில் மொபைல் போன் கைதி மீது போலீசார் வழக்கு
ADDED : பிப் 20, 2024 05:23 AM
புதுச்சேரி : புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் மொபைல் போன்,, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சிறைத் துறையினர் அடிக்கடி சோதனை நடத்தி மொபைல் போன் மற்றும் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த 16ம் தேதி சிறை வளாகத்தில் விசாரணை கைதிகள் பிரிவில் சிறைக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசாரணை கைதி ஒருவர் சந்தேகத்துக்குரிய முறையில் அங்கு நின்று கொண்டிருந்தார்.
அவரை சோதனை செய்ததில் மொபைல் போனை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் அவர் புதுச்சேரி வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட தீன் (எ) தீனதயாளன் என்பது தெரியவந்தது. அவரிட மிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

