/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடியரசு தினத்தையொட்டி போலீசார் தீவிர சோதனை
/
குடியரசு தினத்தையொட்டி போலீசார் தீவிர சோதனை
ADDED : ஜன 23, 2026 05:29 AM

புதுச்சேரி: வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மாநில எல்லை மற்றும் நகரப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்.பி., ஸ்ருதி, ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரயில் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுப்பட்டனர். அதேபோல் மாநில எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தங்கும் விடுதிகளிலும் சோதனை நடத்தினர். விடுதி நிர்வாகிகளிடம், 'தங்குபவர்களின் விவரங்கள், சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவரின் அடையாள அட்டை நகலை கேட்டுப்பெற வேண்டும் என, அறிவுறுத்தினர்.தொடர்ந்து, புதிய பஸ் நிலையத்திலும் போலீசார் ஆய்வு செய்தனர்.

