ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை
ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை
ADDED : ஆக 13, 2026 04:10 AM
புதுச்சேரி: சுதந்திர தினத்தையொட்டி, பெரியக்கடை போலீசார் ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் நேற்று இரவு திடீர் சோதனை செய்தனர்.
அங்கு ஓட்டல் நிர்வாகிகளிடம் வெளியூரில் இருந்து ஓட்டலில் தங்குபவர்களின் விபரங்களை குறித்து கேட்டறிந்த போலீசார், சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, தெரிவித்தனர்.
இதேபோல் ஒதியஞ்சாலை, உருளையான்பேட்டை பஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, ரெட்டியார்பாயைம் போலீசார் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.
