கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகி போலீசார் மீது குற்றச்சாட்டு
கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகி போலீசார் மீது குற்றச்சாட்டு
ADDED : ஆக 13, 2026 03:43 AM
புதுச்சேரி: எனது குடும்பத்தினரை போலீசார் அச்சுறுத்தியதாக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் சமூக வளைதளத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில், போலீசார் தீவிர விசாரணை நடத்தியதாக சவுரவ் தாஸ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் குற்றம்சாட்டி பதிவிட்டார். அதில், எனது குடும்பத்தினர் தங்கியுள்ள புதுச்சேரி வீட்டிற்கு வந்த போலீசார், அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களை அச்சுறுத்தியுள்ளனர்' என தெரிவித்திருந்தனர்.
இந்த பதிவு வைரலான நிலையில், புதுச்சேரி போலீசார் இதனை மறுத்துள்ளனர்.
'சுதந்திர தினத்தையொட்டி, வி.ஐ.பி.,க்கள் வரும் பகுதியில் உள்ள வீடுகளில் புதிய நபர்கள் வந்துள்ளனரா என்பதை வழக்கமாக விசாரித்து வருகிறோம். யார் வீட்டுக்கும் நாங்கள் செல்லவில்லை' என்றனர்.
