/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேதராப்பட்டு பகுதியில் போலீசார் திடீர் சோதனை
/
சேதராப்பட்டு பகுதியில் போலீசார் திடீர் சோதனை
ADDED : அக் 12, 2024 02:40 AM

புதுச்சேரி : சேதராப்பட்டு பகுதியில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரியில் பொது இடங்களில் மதுபானம் குடிப்போர், பெண்களை ஈவ்டீசிங் செய்வோர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவிட்டார். கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் ஆலங்குப்பம், சஞ்சீவி நகர் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அதுபோல் சேதராப்பட்டு போலீஸ் சார்பில் சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சேதராப்பட்டு உள்ளிட்ட பகுதியில் உள்ள சாராயக்கடை, பொது இடங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து ஆய்வு செய்ததுடன் விசாரணையில் ஈடுப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து முக்கிய சந்திப்புகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

