/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
த.வெ.க., மாநாட்டிற்கு அனுமதி வழங்காமல் காவல் துறை மவுனம் ; நிர்வாகிகள் அதிருப்தி
/
த.வெ.க., மாநாட்டிற்கு அனுமதி வழங்காமல் காவல் துறை மவுனம் ; நிர்வாகிகள் அதிருப்தி
த.வெ.க., மாநாட்டிற்கு அனுமதி வழங்காமல் காவல் துறை மவுனம் ; நிர்வாகிகள் அதிருப்தி
த.வெ.க., மாநாட்டிற்கு அனுமதி வழங்காமல் காவல் துறை மவுனம் ; நிர்வாகிகள் அதிருப்தி
ADDED : செப் 25, 2024 11:37 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்காமல் மவுனம் காப்பதால் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய், விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் அக்டோபர் 27ம் தேதி கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.
தொடர்ந்து, மாநாடு நடத்த அனுமதி கோரி, கடந்த 21ம் தேதி த.வெ.க., பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., திருமாலிடம் மனு அளித்தார். மனு அளித்து 4 நாட்களாகியும் போலீசார் அனுமதி அளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
இதனிடையே, மாநாடு நடத்துவதற்கு ஏற்கனவே காவல் துறை விதித்த 31 நிபந்தனைகளுக்குண்டான பணிகளை கட்சி நிர்வாகிகள் செய்து முடித்துள்ளனர்.
மாநாடு நடைபெறும் இடத்தில் இன்று (26ம் தேதி) பூஜை போட்டு பணியை துவக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், இதுவரை போலீசார் அனுமதி தராதது நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாநாடு தொடர்பாக உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அவங்கிருந்து பச்சைக்கொடி காட்டினால் உடனே அனுமதி வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிகிறது.
அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி, அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை. இந்த இரு நிகழ்ச்சிகளுக்கு செல்ல சாலையில் போக்குவரத்து அதிமாக இருக்கும் என்பதாலும், மாநாட்டிற்கு அதிகளவு கூட்டம் வரும் என்பதாலும், மாநாடு நடைபெற அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

