/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாமி வீதியுலாவிற்கு தடை சங்கராபுரம் அருகே போலீஸ் குவிப்பு
/
சாமி வீதியுலாவிற்கு தடை சங்கராபுரம் அருகே போலீஸ் குவிப்பு
சாமி வீதியுலாவிற்கு தடை சங்கராபுரம் அருகே போலீஸ் குவிப்பு
சாமி வீதியுலாவிற்கு தடை சங்கராபுரம் அருகே போலீஸ் குவிப்பு
ADDED : ஏப் 12, 2025 05:53 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாமி வீதியுலாவிற்கு தடை விதித்து, போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அங்குள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டது. 13 ஆண்டிற்கு பிறகு கடந்தாண்டு ஆர்.டி.ஓ., தலைமையில் கூட்டுக்குழு அமைத்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்திருவிழா நடந்தது.
அதனையொட்டி, அரசம்பட்டு மணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று பங்குனி உத்திர தேர் திருவிழா நடத்த அனுமதி அளித்த ஆர்.டி.ஓ., லுார்துசாமி, இரவு சாமி வீதியுலா நடத்த தடை விதித்தார்.
அதன்படி, நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தனர். அதனைத் தொடர்ந்து, இரவு சாமி வீதியுலா நடத்த ஆர்.டி.ஓ., தடை விதித்து உத்தரவு நகல் கோவில் கதவில் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் தடையை மீறி ஒரு தரப்பினர் சாமி வீதியுலா நடத்த போவதாக தகவல் பரவியது.
அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உத்திரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

