sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அ.தி.மு.க., முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்; ஜெ., பிறந்தநாளில் வெளியிடும் பழனிசாமி

/

 அ.தி.மு.க., முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்; ஜெ., பிறந்தநாளில் வெளியிடும் பழனிசாமி

 அ.தி.மு.க., முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்; ஜெ., பிறந்தநாளில் வெளியிடும் பழனிசாமி

 அ.தி.மு.க., முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்; ஜெ., பிறந்தநாளில் வெளியிடும் பழனிசாமி

10


UPDATED : பிப் 18, 2026 03:32 PM

ADDED : பிப் 18, 2026 05:44 AM

Google News

10

UPDATED : பிப் 18, 2026 03:32 PM ADDED : பிப் 18, 2026 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வரும் பிப்., 24ல், சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அ.தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியதாவது: வழக்கமான அரசியல் வியூகங்களுக்கு அப்பாற்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிடும் தனி பாணியை கையாண்டார் மறைந்த ஜெயலலிதா.

வளர்பிறை அஷ்டமி, பஞ்சமி திதி நாளில், வேட்பாளர் அறிவிப்பை வெளியிடுவது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அந்நாளை பின்பற்றி வந்தார் ஜெயலலிதா. அது பல தேர்தல்களில் அவருக்கு கைகொடுத்துள்ளது.

அவருடைய பாணியில் தற்போது, ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24யில், முதல் கட்டமாக 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை வெளியிட முடிவெடுத்துள்ளார் பழனிசாமி.

இந்த பட்டியலில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறுவர். ஒரு பெண்ணுக்கும் அதில் இடம் கிடைக்கும். சில நாட்களுக்கு முன்பாகவே பட்டியலை தயார் செய்துவிட்ட பழனிசாமி, திருப்பதி சென்று பெருமாளை தரிசித்தபோது, பெருமாள் திருவடியில் வைத்து தரச் சொல்லி, அதை பெற்று திரும்பி இருக்கிறார்.

வரும் பிப்., 24, ஜெ., பிறந்த நாள் மட்டுமல்ல; வளர்பிறை அஷ்டமி நாளும் கூட. அதன்காரணமாகவே, அந்த நாளை தேர்வு செய்திருக்கும் பழனிசாமி, தேர்தல் தொடர்பாக, முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார். இவ்வாறு அவர் கூறினர்.

-நமது நிருபர்-:






      Dinamalar
      Follow us