தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அமைதியான சூழல்... அளவில்லா கற்றல்

 அமைதியான சூழல்... அளவில்லா கற்றல்

 அமைதியான சூழல்... அளவில்லா கற்றல்


ADDED : பிப் 18, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

1996ம் ஆண்டில் பிஷப் ஜேக்கப் துாம் குழி, கல்வியின் பயனை ஏழை, எளிய மக்களும் பெற்று பயனடைய வேண்டுமென்ற நோக்கத்தில் அல்லிகாரம்பாளையம் என்ற இடத்தில் கரடுமேடாக இருந்த நிலத்தை சரிசெய்து ஒரு தொடக்கப் பள்ளியை நிறுவினார். அதன்பிறகு கல்வி விழிப்புணர்வு தாக்கத்தால் குழந்தைகள் நலன், பாதுகாப்பு, மாணவர்களின் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு கண்டு மென்மேலும் பள்ளியின் வளர்ச்சியை உயர்நிலை, மேல்நிலை பள்ளியாக மாற்றினார். தற்போது புனித மரியன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அன்னூர் அல்லிகாரம்பாளையத்தில் அடையாளமாக மாறியுள்ளது.

ஒரு பள்ளி என்பது குழந்தைகளுடைய இரண்டாவது இல்லமாகும். பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அறிவால் வளர்க்கின்றனர். அமைதியான கற்றல் சூழலை உருவாக்கும் வகையில், மிகவும் அமைதியான மற்றும் சுகாதாரமான சூழலில் பள்ளி அமைந்துள்ளது.

பெரிய விளையாட்டு மைதானம், சுத்தமான நடைபாதைகள், பசுமை சூழ்ந்த தோட்டங்கள், விளையாட்டு பூங்கா, சி.சி.டிவி பொருத்தப்பட்ட பள்ளி வாகன வசதி, காற்றோட்டமுள்ள வகுப்பறைகள், அதிநவீன வசதி கொண்ட ஆய்வுக் கூடங்கள், கணினி வசதி கொண்ட ஆய்வகங்கள், அதிநவீன ரோபோடிக்ஸ் வகுப்புகள் மற்றும் மிகப்பெரிய நுாலகம் போன்று மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவும், எதிர்காலத்தை வளமாக்கவும், பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கவும் அனைத்து வசதிகளும் கொண்டதாக உள்ளது.

பள்ளியில் பல்வேறு விளையாட்டுகள், கராத்தே, சிலம்பம், யோகா, நடனம், பேண்ட், ஸ்கேட்டிங், ஓவியம் போன்ற வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. கல்வியுடன் சேர்ந்து நல்லொழுக்கம், பணிவு, மனிதநேயம் போன்ற உயர்ந்த பண்புகளையும் மாணவர்களிடம் வளர்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us