சட்ட விரோதமாக தங்கியிருந்த தம்பதி மீது போலீசார் வழக்கு
சட்ட விரோதமாக தங்கியிருந்த தம்பதி மீது போலீசார் வழக்கு
UPDATED : ஜூன் 15, 2026 11:45 PM
ADDED : ஜூன் 15, 2026 11:35 PM
காரைக்கால்: காரைக்காலில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டு பெண் மற்றும் கணவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு.
புதுச்சேரி ,காரைக்கால் மாவட்டம், தருமபுரம் பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் வசித்து வருவதாக சிறப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் மரிய கிறிஸ்டின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் தருமபுரம் பகுதியை சேர்ந்த பிரசாத், 26; என்பவர் மியான்மர் நாட்டிற்கு வேலைக்க சென்றபோது, அந்நாட்டை சேர்ந்த ஏயி மியாட்திடகினா என்கின்ற செல்வராணி, 25 ;என்ற பெண்ணை காதலித்திருமணம் செய்துகொண்டு, சொந்த ஊரில் கணவன் மனைவியாக வாழ்ந்தது வந்தது தெரியவந்தது.
இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக சட்ட விரோதமாக காரைக்காலில் தங்கி இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.இதன் அடிப்படையில் சிறப்பு பிரிவு போலீசார் புகாரின் பேரில் நேற்று முன்தினம் நகர போலீசார் மியான்மரை சேர்ந்த செல்வராணி மற்றும் தருமபுரம் பகுதியை சேர்ந்த பிரசாத் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
