sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடன் கொடுத்தவர் மீது தாக்குதல் : மூன்று பேர் மீது போலீசார் வழக்கு

கடன் கொடுத்தவர் மீது தாக்குதல் : மூன்று பேர் மீது போலீசார் வழக்கு

கடன் கொடுத்தவர் மீது தாக்குதல் : மூன்று பேர் மீது போலீசார் வழக்கு


ADDED : நவ 11, 2025 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 06:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டையில் வாங்கிய கடனை திரும்ப தராமல் தாக்கிய, பெண் போலீஸ் மகன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம், கம்பன் நகரை சேர்ந்தவர் தேசிங்கு மகன் ராமதாஸ். 40. இவர் தனது நண்பரான குயவர்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ. 7 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

அதன்பின், ராமதாஸ் தான் கொடுத்த கடனை திரும்ப கேட்டபோது, விஜயகுமார் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்துள்ளார்.இதற்கிடையே, கடந்த 30ம் தேதி விஜயகுமார் பணத்திற்கு பதிலாக ரூ. 7 லட்சத்திற்கான காசோலை கொடுத்துள்ளார்.

அதனை ராமதாஸ் வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பியது.

இதையறிந்த விஜயகுமார் பணத்தை நேரில் வந்து பெற்று கொள்ளும்படி திருவள்ளூவர் சாலையில் தனியார் ஷோரூமிற்கு ராமதாசை அழைத்துள்ளார்.

அங்கு சென்ற ராமதாசை, விஜயகுமார் மற்றும் அவருடன் இருந்த அடையாளம் தெரியாத 2 பேர் சேர்ந்து பணத்தை திரும்ப தர முடியாது என கூறி தாக்கியதுடன், அதில் ஒருவர் தனது தாய் போலீஸ் என கூறி மிரட்டியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் விஜயகுமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us