ADDED : நவ 11, 2024 07:21 AM

திருக்கனுார் : திருக்கனுார் பஜார் வீதியில் வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவின்பேரில், மேற்கு பகுதி எஸ்.பி., வம்சித ரெட்டி மேற்பார்வையில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கொடி அணிவகுப்பு நடத்தினர்.அதில், சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப் பட்டிருந்த இருசக்கர வாகனங்களை முறைப்படுத்தியதுடன், சாலையோர ஆக்கிரமிப்புகளைஅகற்றினர். மீண்டும் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
நகை மற்றும் மதுபான கடைகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென உத்தரவிட்டனர்.